முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சமீபத்திய பதிவு

என் மாய(யா) உலகம்

மு ன்னே இருப்பது கந்தகங்கமழும் கான்க்ரீட் காடு என்னுள் தெரிவது  பூந்தென்றல் அலையும் பொதிகையின் காடு என் நாற்புறமும் சாளரஞ்சூழும் வெறுமையடர்ந்த சுவர்கள் கணத்தில் வானவில்லில் தோய்ந்த கார்கால மலர்ப்புதர்களாகின்றன இறங்கி வெளியே நடக்கிறேன் கல்தரையும் தோல்செருப்பும் மீறிக்கொண்டு பாதம்தீண்டும் பனிநுனியோடு பஞ்சுப்புல்தரை வலப்புறக் கண்ணாடிக்கோபுரம் வடிவுருகி வழிந்தோடி முகங்காட்டும் நீர்த்தடாகமாகிறது இடப்புறப் பெருங்கட்டிடம் உதிர்ந்து இறுகப்பிணைந்த மரக்கூட்டமாகிறது எதிர்வரும் மதில்களின் சாளரத்துச்சீலைகள் கிழிந்து பறந்து வண்ணத்துப்பூச்சிகளாய் கன்னம் வருடிச்செல்கின்றன சாலையிரைச்சல் சில்வண்டுகளின் கச்சேரியாகிறது கூடெனச்சூழும் தூசிப்புகையும் அருவிப்புனலெழுப்பும் சாரலாய்... என்னைச்சுற்றுமுள்ள உலகு வேறு எனக்குள் நீண்டு பரவும் உலகு வேறு என் புறக்கண்களுக்கும் அகக்கண்களுமிடையே அப்படி ஒரு ஏற்பாடு... -மாயா

சமீபத்திய இடுகைகள்